இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தைத் தாண்டியது!

இந்தியாவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 20,471 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

DIN

இந்தியாவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 20,471 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 20,471 ஆகவும், பலி எண்ணிக்கை 652 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை3,960  பேர் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருக்கிறது. இங்கு பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இங்கு தற்போது 5,221 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 251 பேர் உயிரிழந்துள்ளனர். அதைத் தொடர்ந்து குஜராத்தில் 2,272 பேரும், தில்லியில் 2,156 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

SCROLL FOR NEXT