தில்லியில் இன்று புதிதாக 75 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
தில்லியில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,081 ஆக இருந்த நிலையில், இன்று பரிசோதனை செய்ததில் 75 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கரோனா பாதிப்பு 2,186 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக தில்லியில் கரோனாவுக்கு 47 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா பாதிக்கப்பட்ட 611 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர். 27 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 5 பேர் வெண்டிலேட்டர் மூலமாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று (புதன்கிழமை) முதல் ஊடகவியலாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட தகவல்களை தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.