முகப்பு
இந்தியா

மெக்ஸிகோவில் கரோனா பலி எண்ணிக்கை 857 ஆக உயர்வு

மெக்ஸிகோவில் கரோனா நோய்த் தொற்றுக்குப் பலியானோர் 145-லிருந்து 857 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Updated On : 22 ஏப்ரல், 2020 at 11:59 AM
பகிர்:

மெக்ஸிகோவில் கரோனா நோய்த் தொற்றுக்குப் பலியானோர் 145-லிருந்து 857 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தாண்டில் கரோனா தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து இதுவரை 9,501 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 857 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் 2,627 பேர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் லூயிஸ் அலோமியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

கடந்த மார்ச் 11-ம் தேதி புதிய ரக கரோனா வைரஸ் பரவியதையடுத்து உலக சுகாதார அமைப்பு (WHO) கரோனா தொற்றுநோயாக அறிவித்தது. 

Advertisement

உலகளவில் கரோனாவுக்கு 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,62,000-க்கும் மேற்பட்டோர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.