இந்தியா

செல்லிடப்பேசிகள் வழியாகவும் கரோனா தொற்று பரவும்

மருத்துவமனைக்கு பணிக்கு வரும் மருத்துவப் பணியாளர்கள் அனைவரும், வளாகத்துக்குள் நுழையும் முன்பே செல்லிடப்பேசிகளைக் கொடுத்துவிட்டு

ANI

மருத்துவமனைக்கு பணிக்கு வரும் மருத்துவப் பணியாளர்கள் அனைவரும், வளாகத்துக்குள் நுழையும் முன்பே செல்லிடப்பேசிகளைக் கொடுத்துவிட்டு பணிக்குச் செல்ல வேண்டும் என்று மேற்கு வங்க முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா தொற்று செல்லிடப்பேசிகள் மூலமாகவும் பரவும் வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவுறுத்தல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், மருத்துவமனைக்குச் செல்லும் அனைத்து மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும், நோயாளிகளும் மருத்துவமனை வளாகத்துக்குள் செல்லும் போதே தங்களது செல்லிடப்பேசிகளை கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும்.

மருத்துவமனையில் இருந்து வெளியே செல்லும் போது தங்களது செல்போன்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் மேற்கு வங்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவப் பணியாளர்களுக்கும், மருத்துவமனை பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில் மேற்கு வங்க அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

SCROLL FOR NEXT