கரோனா பாதிப்பு 
இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பு 21,700; பலி 686 ஆக உயர்வு: சுகாதாரத் துறை

இந்தியாவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 21,700 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

DIN

இந்தியாவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 21,700 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 20 ஆயிரத்தைத் தாண்டியது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை 21,700 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 686 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,325  பேர் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருக்கிறது. இங்கு பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இங்கு தற்போது 5,652 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 269 பேர் உயிரிழந்துள்ளனர். அதைத் தொடர்ந்து குஜராத்தில் 2,407 பேரும், தில்லியில் 2,248 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

SCROLL FOR NEXT