பஞ்சாபின் மோகா மாவட்டமும் கரோனா இல்லாத பகுதியானது
பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 4 பேர் குணமடைந்து
மோகா: பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து, அந்த மாவட்டமும் கரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் 4 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, கடந்த இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சையைத் தொடர்ந்து இவர்களுக்கு இரண்டு முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் இருந்து திரும்பினர் என்று பஞ்சாப் மாநில சிறப்பு முதன்மைச் செயலாளர் கேபிஎஸ் சித்து தெரிவித்துள்ளார்.
இந்த மாநிலத்தில் மட்டும் 251 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 49 பேர் குணமடைந்து 16 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.