ஹரியாணா முதல்வா் மனோகா் கட்டா். 
இந்தியா

ஹரியாணாவில் ஊடகவியலாளர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு: முதல்வர் அறிவிப்பு

கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் இக்காலத்தில் பணியில் ஈடுபடும் பத்திரிகையாளர்களுக்கு தலா ரூ.10 லட்சம் காப்பீடு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் தெரிவித்துள்ளார். 

DIN

கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் இக்காலத்தில் பணியில் ஈடுபடும் பத்திரிகையாளர்களுக்கு தலா ரூ.10 லட்சம் காப்பீடு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதில் இந்தியா முழுவதும் பத்திரிக்கையாளர்கள் 70க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 

மும்பையில் 53 பேருக்கும், சென்னையில் 27 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தந்த மாநிலங்களில் ஊடகவியலாளர்களுக்கு கரோனா சிறப்பு பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, ஊடகவியலாளர்கள் பணியில் ஈடுபடும் போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. 

இதையடுத்து, பத்திரிகையாளர்களுக்கு காப்பீடு வழங்க ஹரியாணா மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, ஹரியாணாவில் கரோனா தொற்று பரவி வரும் காலத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு தலா ரூ.10 லட்சம் காப்பீடு வழங்கப்படுவதாக முதல்வர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

SCROLL FOR NEXT