மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கரோனா பாதிப்பு 100 ஐ எட்டியுள்ளதாக அம்மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்தார்.
நாட்டிலேயே கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு ஒரே நாளில் புதிதாக 778 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 6430-ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றுக்கு 840 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 283 பேர் பலியாகியுள்ளனர்.
இதில், 70%க்கும் அதிகமான பாதிப்புகள் மும்பையில் உள்ளன. கடந்த சில தினங்களாக நாக்பூரிலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாக்பூரில் வெள்ளிக்கிழமை இருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து இங்கு மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 98 லிருந்து 100 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா உறுதியான இரண்டு நோயாளிகளும் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களின் சோதனை முடிவுகள் இன்று வந்ததாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார். நாக்பூரில் இதுவரை, 15 நோயாளிகள் குணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், நாக்பூரில் கரோனா தடுப்பு நடவடிகைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.