சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகக் குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,683 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் இதுவரை 400 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான சென்னைக்கு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகக் குழு சென்னை விரைந்துள்ளது. இத்தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய குழு ஆய்வு செய்யும் என்று அரசு தெரிவித்திருந்த நிலையில், மேற்குவங்கம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகக் குழு சென்று ஆய்வு செய்வது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 23,077 ஆகவும் உயிரிழப்பு 718 ஆகவும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.