முகப்பு
இந்தியா

காரில் செல்லும் போது ஏசியை இயக்குவது கரோனா பரவலுக்கு உதவலாம்

கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகைள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், நிபுணர்களின் பரிந்துரையை கேரள அரசு

Updated On : 24 ஏப்ரல், 2020 at 12:31 PM
பகிர்:


கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகைள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், நிபுணர்களின் பரிந்துரையை கேரள அரசு ஏற்றுக் கொண்டால், இனி கார் ஓட்டும் போது ஏசியை இயக்குவதற்கு கட்டுப்பாடுகள் உருவாகலாம் என்று கூறப்படுகிறது.

அதாவது, கேரள மாநில அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு அளித்திருக்கும் பரிந்துரையில், கார் உள்ளிட்ட சுற்றுப்புறத்தில் கரோனா தொற்று இருக்கும்பட்சத்தில், கார் ஓட்டும் போது ஏசியை இயக்குவது ஆபத்தாக இருக்கலாம் என்றும், குளிர்சாதனக் கருவிகளை விற்பனை செய்யும் கடைகளை இயக்க தற்போதைக்கு அனுமதிக்க வேண்டாம் என்றும், கார்களில் ஏசியை இயக்க கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த எவ்வாறு கைக்கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்றவற்றை கடைப்பிடிக்கிறோமோ அதுபோலவே கார்களில் ஏசியின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

காரில் ஏசியை இயக்கும் போது கரோனா தொற்று பரவும் என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்றாலும், ஒரு காரில் கரோனா தொற்று பாதித்தவர் இருப்பாரானால், அவரிடம் இருந்து ஏசியின் காற்றுப் பரவல் மூலம் மற்றவர்களுக்கும் கரோனா பரவும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, கூடுமானவரையில் பொதுமக்கள் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பது நினைவில் கொள்ளத் தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.