முகப்பு
இந்தியா

கரோனா தொற்று பல புதிய படிப்பினைகளை ஏற்படுத்தியிருக்கிறது: பிரதமர் மோடி

கரோனா தொற்று பரவல் அனைவருக்குமான படிப்பினையாக உள்ளது, இது பல புதி படிப்பினைகளை ஏற்படுத்தியிருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Updated On : 24 ஏப்ரல், 2020 at 11:51 AM
பகிர்:


புது தில்லி: கரோனா தொற்று பரவல் அனைவருக்குமான படிப்பினையாக உள்ளது, இது பல புதி படிப்பினைகளை ஏற்படுத்தியிருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து தலைவர் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது, கரோனா தொற்று பரவல் நம் அனைவரும் வேலை செய்யும் முறையையே மாற்றி விட்டது. கரோனா தொற்று எனும் பேரிடர் நாம் இதுவரை சந்தித்திராத பல புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.  ஆனால் அதன் மூலம் நாம் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளோம்.

Advertisement

மக்கள் தொகை அதிகம் நிறைந்த இந்தியா, சமூக இடைவெளியைப் பின்பற்றி எப்படி கரோனாவை கட்டுப்படுத்துகிறது என்பதை உலகமே உற்று நோக்குகிறது. மக்களின் ஒட்டுமொத்த ஆதரவால், நாம் கரோனாவை எப்படி கட்டுப்படுத்தி வருகிறோம் என்பதை உலகமே பேசிக் கொண்டிருக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.