முகப்பு
இந்தியா

ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு 1,061-ஆக உயர்வு

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 61 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,061-ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:31 PM
பகிர்:



அமராவதி: ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 61 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,061-ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,506 -ஆக உயர்ந்துள்ளது, இதில் 18,668 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 5,063 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர், தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 775 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில், ஆந்திரம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 61 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1061-ஆக உயர்ந்துள்ளது, தொற்று பாதிப்பால் இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர், தொற்று பாதிப்பில் இருந்து 171 பேர் குணமடைந்துள் வீடு திரும்பியுள்ளனர் என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →