கோப்புப் படம் 
இந்தியா

தில்லியில் மனைவியைக் கொன்ற கணவர்; பரிதவிக்கும் 9 குழந்தைகள்

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் தில்லியில் குடும்பச் சண்டை வன்முறையாக மாறியதில் மனைவியை கணவன் அடித்துக் கொன்றார். இதனால் அவர்களது ஒன்பது குழந்தைகளும் பரிதவிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

IANS

புது தில்லி: ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் தில்லியில் குடும்பச் சண்டை வன்முறையாக மாறியதில் மனைவியை கணவன் அடித்துக் கொன்றார். இதனால் அவர்களது ஒன்பது குழந்தைகளும் பரிதவிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

இருவருக்குமே இரு இரண்டாவது திருமணம். சம்பவத்தைத் தொடர்ந்து கணவரே காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

கரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் மடிப்பூர் ஜேஜே காலனியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கணவருக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட குடும்பச் சண்டையில் மனைவியை கணவர் அடித்துக் கொன்றுள்ளார். கொலை செய்த கணவர் ரைசுல் அஸமை (34) காவல்துறையினர் கைது செய்தனர். அவர் தெருவோர வியாபாரியாக இருந்தவர். 
அவர் தன்னை விட 5 வயது மூத்த குல்ஷன் (39) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அசமுக்கு முதல் திருமணத்தில் 3 குழந்தைகள் உள்ளனர். குல்ஷனுக்கு முதல் திருமணத்தில் 6 குழந்தைகள் உள்ளனர்.

இருவருக்கும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய பேச்சு எழுந்த போது, அதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சண்டை வந்துள்ளது. ஆத்திரத்தில் குல்ஷனை அஸம் அடிக்க, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். உடனடியாக காவல்துறைக்கு அசம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார்.

தாய் மரணம் அடைந்து, தந்தை சிறைக்குச் சென்ற நிலையில், அவர்களது 9 குழந்தைகளும் நிராதரவாகியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்தாம் வகுப்பு: தனித் தோ்வா்களுக்கு இன்று முதல் செய்முறைத் தோ்வு

கமல்ஹாசன் பெயா், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

#t20wc | இந்தியா அரையிறுதி செல்ல இதெல்லாம் நடக்குமா? | T20 World Cup |

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT