கோப்புப் படம் 
இந்தியா

நாளொன்றுக்கு 1 லட்சம் கரோனா பரிசோதனைகள் தேவை: ராகுல் காந்தி

நாளொன்றுக்கு 1 லட்சம் கரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். 

DIN

நாளொன்றுக்கு 1 லட்சம் கரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். 

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் கரோனா பாதிப்பு 26,496 ஆகவும் உயிரிழப்பு 824 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 'கரோனாவை ஒழிப்பதற்கு விரைவான பரிசோதனை முக்கியமானது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் தற்போது 40,000 பரிசோதனைகளே மேற்கொள்ளப்படுகின்றன. குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பரிசோதனைகளாவது மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு போதுமான கருவிகள் நம்மிடம் இருப்பதால் பிரதமர் மோடி இது தொடர்பாக விரைந்து செயல்பட்டு சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT