ஒடிசாவில் மேலும் 3 பேருக்கு கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 103ஆக உயர்வு
ஒடிசாவில் மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒடிசாவில் மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலமே தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது.
இந்த நிலையில் ஒடிசாவில் மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் அங்கு கரேனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 103ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
அவர்களின் 68 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 34 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திம்பியுள்ளனர். மேலும் அங்கு கரோனாவுக்கு இதுவரை ஒருவர் மட்டுமே பலியாகியுள்ளனர். தில்லியில் 2,625, மத்தியப் பிரதேசம் - 2,096, ராஜஸ்தான் - 2,141 தமிழகம் - 1,821 உத்தரப் பிரதேசம் - 1,793 ஆந்திரா - 1,061 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.