இந்தியா

கேரளத்தில் புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று: 5 பேர் தமிழர்கள்

DIN


கேரளத்தில் புதிதாக கரோனா பாதிப்புக்குள்ளான 13 பேரில் 5 பேர் தமிழர்கள் என அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (திங்கள்கிழமை) அவர் தெரிவித்ததாவது:

"கேரளத்தில் புதிதாக 13 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 481 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிப்புக்குள்ளானோரில் கோட்டயத்திலிருந்து 6 பேர், இடுக்கியிலிருந்து 4 பேர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கண்ணூரிலிருந்து தலா ஒருவர். இதில் 5 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளார். மற்றவர்களுக்கு தொடர்பில் இருந்தன்மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளானோரில் 123 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 355 பேர் குணமடைந்துள்ளனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 400 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் உள்ளனர்.

கடந்த இரண்டு நாள்களில் பாதிப்பு எண்ணிக்கை கூடியதையடுத்து, கோட்டயம் மற்றும் இடுக்கியை சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT