இந்தியா

தில்லி தனியார் மருத்துவமனை ஊழியர்கள் 33 பேருக்கு கரோனா

தில்லி தனியார் மருத்துவமனை ஊழியர்கள் 33 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

தில்லி தனியார் மருத்துவமனை ஊழியர்கள் 33 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தில்லியில் பிரபல தனியார் மருத்துவமனையான மேக்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இரு மருத்துவர்களும் அடங்குவர். மேலும், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் உள்பட பாதிக்கப்பட்ட அனைவரும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் முயற்சியில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

மேக்ஸ் ஹெல்த்கேர் குழு, நாடு முழுவதும் உள்ள தங்கள் அனைத்து ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என இரு வாரங்களுக்கு முன்பு கூறியிருந்தது. அதன்படி, மேக்ஸ் குழு ஊழியர்களுக்கு தொடர்ந்து பரிசோதனை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT