திருவனந்தபுரம்: கரோனாவில் இருந்து தப்பிக்க ஒரு மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், கேரளத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தினர் புதிய யுக்தியைக் கண்டறிந்துள்ளனர்.
ஒரு மீட்டர் இடைவெளையை பின்பற்ற வசதியாக வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, அனைவரும் குடைபிடித்துச் செல்கிறார்கள். இதன் மூலம் ஒரு மீட்டர் இடைவெளியை மிகச் சரியாகப் பின்பற்ற முடியும் என்பதே அந்த திட்டம்.
கேரள மாநில நிதித் துறை அமைச்சர் தாமஸ் ஈஸாக் கொண்டு வந்த இந்த திட்டம் இப்போது வைரலாகி வருகிறது. பொருளாதார நிபுணராக இருந்து அமைச்சராக மாறிய தாமஸ் ஈஸாக், தனது இந்த யோசனையை தண்ணீர்முக்கம் கிராம நிர்வாகத்திடம் சொல்லியிருக்கிறார்.
இதையடுத்து, அந்த திட்டத்தை கிராம மக்கள் தீவிரமாக அமல்படுத்தத் தயாராகிவிட்டனர். இது பற்றி கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டார்கள். அதன்படி, வீட்டை விட்டு வெளியே வரும் எவராக இருந்தாலும் கையில் குடைபிடித்துச் செல்கிறார்கள் கரோனாவில் இருந்து தப்பிக்க.
ஒரு மீட்டர் இடைவெளியைப் பின்பற்ற குடைபிடித்துச் செல்வது என்பது நல்ல யோசனை என்பதோடு, கோடை வெயிலோடு, கரோனாவில் இருந்தும் தப்பிக்க உதவுகிறது என்கிறார்கள் கிராம மக்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.