பிகாரில் மேலும் மூவருக்கு கரோனா: பாதிப்பு 277 ஆனது
பிகார் மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி மேலும் மூவருக்குப் புதிதாக கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள..
பாட்னா: பிகார் மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி மேலும் மூவருக்குப் புதிதாக கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு 277 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முங்கர் மாவட்டம் ஜமல்பூரில் சதர் பஜார் பகுதியிலிருந்து புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்தார்.
புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் 12 முதல் 17 வயத்துக்குட்ட பெண்கள் ஆவர். மொத்தம் பிகார் மாநிலத்தில் 219 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 56 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 16,985 பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.