கோப்புப்படம் 
இந்தியா

கரோனா தொற்று: மாநிலங்கள் நிலவரம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ராஜஸ்தான், பஞ்சாப், ஜார்கண்ட், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இன்றைக்கு புதிதாக பாதிப்புக்குள்ளானவர்களின் சமீபத்திய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

DIN


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ராஜஸ்தான், பஞ்சாப், ஜார்கண்ட், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இன்றைக்கு புதிதாக பாதிப்புக்குள்ளானவர்களின் சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தான்:

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்றைக்கு புதிதாக 77 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,262 ஆக உயர்ந்துள்ளது. 

மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதி மும்பை. அங்கு மட்டும் இன்றைக்கு புதிதாக 395 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 15 பேர் பலியாகியுள்ளனர், 118 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 5,589 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் மும்பையில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 219 ஆகவும், மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,015 ஆகவும் உயர்ந்துள்ளது.

பஞ்சாப்:

பஞ்சாபில் புதிதாக 8 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 330 ஆக உயர்ந்துள்ளது. 

ஜார்கண்ட்:

ராஞ்சியில் புதிதாக 5 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 20 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.

தெலங்கானா:

தெலங்கானாவில் இன்றைக்கு புதிதாக 2 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,003 ஆக உயர்ந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT