இந்தியா

கரோனாவால் உயிரிழந்த முஸ்லிம் நபரின் உடலை அடக்கம் செய்த இந்து இளைஞர்கள்

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கரோனாவால் உயிரிழந்த முஸ்லிம் ஒருவரை இந்து மதத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் அடக்கம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கரோனாவால் உயிரிழந்த முஸ்லிம் ஒருவரை இந்து மதத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் அடக்கம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன இதில், மத்தியபிரதேச மாநிலத்திலும் கரோனா பாதிப்பு அதிகம் இருந்து வருகிறது. இந்தூரில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் இந்தூர் ஆரோபிந்தோ மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வந்த முஸ்லிம் நபர் ஒருவர் உயிரிழந்தார். கரோனா பரவி விடும் என்ற அச்சத்தில் அவரது உறவினர்கள் கூட அருகில் வராத நிலையில், நான்கு இந்து இளைஞர்கள் சேர்ந்து அவரது உடலை அடக்கம் செய்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT