கோப்புப்படம் 
இந்தியா

கரோனாவில் இருந்து தப்பிக்க உடுத்திய ஆடைகளிலும் கவனம் தேவை

கைகளை அவ்வப்போது சோப்புப் போட்டு கழுவுதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்றவை கரோனாவில் இருந்து நம்மைக் காக்கும் என்பது பலருக்கும் தெரிந்ததே. ஆனால், தெரியாதது, நாம் உடுத்தும் ஆடைகளும் கரோனாவைக் கடத

IANS

புது தில்லி: கைகளை அவ்வப்போது சோப்புப் போட்டு கழுவுதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்றவை கரோனாவில் இருந்து நம்மைக் காக்கும் என்பது பலருக்கும் தெரிந்ததே. ஆனால், தெரியாதது, நாம் உடுத்தும் ஆடைகளும் கரோனாவைக் கடத்தும் என்பதுதான்.

வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவதும், வீட்டுக்குள் வந்ததும் கைகளை சோப்புப் போட்டுக் கழுவுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு நாம் உடுத்தியிருந்த ஆடைகளை வீட்டில் இருப்பவர்கள் யாரும் தொடாமல், வேறு எந்தப் பொருளிலும் பட்டுவிடாமல் நேராக சலவை இயந்திரத்தில் போட்டு உடனடியாக துவைத்து விடுவதும் முக்கியம்.

அதே சமயம், மருத்துவமனை போன்றவற்றில் பணியாற்றுவோர், வீட்டுக்கு வந்ததும், யார் கை படாமலும், தங்களது துணியை சலவை இயந்திரத்தில் தனியாகப் போட்டு துவைத்து நன்கு சூரிய வெளிச்சத்தில் காய வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒருவேளை கரோனா தொற்று உடைகளில் ஒட்டிக் கொண்டிருந்தால், அதன் மூலம் வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு கரோனா தொற்று பரவாமல் தடுக்க இது நிச்சயம் உதவும்.

வீட்டில் இருப்பவர்களும் தினமும் துவைத்த சுத்தமான ஆடைகளை அணிவதும், ஆடைகள் மட்டுமல்லாமல், துண்டு போன்றவையும் அவ்வப்போது துவைத்து சுத்தமாக வைத்துக் கொள்வதும் அவசியம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT