முகப்பு
இந்தியா

பெங்களூரு மருத்துவமனையில் கரோனா சோதனையில் ரோபோக்கள்

மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை, கரோனா பரிசோதனை பணியில் ரோபோக்களை ஈடுபடுத்தியுள்ளது.

Updated On : 27 ஏப்ரல், 2020 at 5:43 PM
கோப்புப் படம்
பகிர்:

பெங்களூரு: மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை, கரோனா பரிசோதனை பணியில் ரோபோக்களை ஈடுபடுத்தியுள்ளது.

மருத்துவமனை வாயிலில் இரண்டு ரோபோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவை மருத்துவமனைக்கு வருவோருக்கு கரோனா பரிசோதனை செய்கின்றன.

மித்ரா என்றழைக்கப்படும் இரண்டு ரோபோக்கள், மருத்துவமனை வாயிலில் நிறுத்தப்பட்டுள்ளன. அவை, முகத்தை கண்டறியும் திறனுடன், மருத்துவமனைக்கு வருவோரிடம் பேசி, அவர்களுக்கு காய்ச்சல், இருமல், சளி போன்ற கரோனா அறிகுறிகள் இருக்கிறதா என்று கேட்டு, உடல் வெப்பப் பரிசோதனையையும் மேற்கொள்ளும். இதன் மூலம், நோயாளிகளை பரிசோதிக்கும்போது மருத்துவப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று பரவுவது தடுக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மருத்துவமனைக்கு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ துணைப் பணியாளர்கள், நோயாளிகள், பார்வையாளர்கள் என அனைவரையும் இந்த ரோபோக்கள் பரிசோதனை செய்கின்றன.

உடல் வெப்ப நிலையைக் கண்டறியும் சோதனையை செய்யும் ரோபோக்கள், அவர்களிடம் சளி, இருமல் இருக்கிறதா என்று கேட்ட பிறகு, நோயாளியின் பெயர், புகைப்படம் கொண்ட அனுமதி சீட்டு வழங்குகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.