முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு 520 ஆனது

கர்நாடகத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:33 PM
பகிர்:

பெங்களூரு: கர்நாடகத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 

நேற்று மாலை முதல் இன்று பிற்பகல் வரை புதிதாக எட்டு பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் தொற்று எண்ணிக்கை 520 ஆக உயர்ந்துள்ளது.

இதில், இதுவரை கரோனாவுக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர். 198 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதிதாகப் பாதிக்கப்பட்ட 8 பேரில், ஆறு கலபுராகியைச் சேர்ந்தவர்கள். மேலும் 2 பேர் ஏற்கெனவே கரோனா பாதித்தவர்களின் தொடர்புடையவர்கள் ஆவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.