முகப்பு
இந்தியா

பறவையின் உடலில் மின்னணுக் கருவி; பிஜப்பூரில் பதற்றம்

கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் வெளிநாட்டுப் பறவையின் உடலில் மின்னணுக் கருவி பொருத்தப்பட்டிருப்பததைப் பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Updated On : 28 ஏப்ரல், 2020 at 4:29 PM
பகிர்:


விஜயபுரா: கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் வெளிநாட்டுப் பறவையின் உடலில் மின்னணுக் கருவி பொருத்தப்பட்டிருப்பததைப் பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வேகமாகப் பரவி வரும் கரோனா தொற்று காரணமாக ஏற்கனவே அச்சத்தில் இருக்கும் யம்பத்நல் கிராம மக்கள், மின்னணுக் கருவியுடன் செத்துக் கிடந்த புறாவைப் பார்த்து மேலும் அச்சமடைந்தனர்.

செத்துக் கிடந்த புறாவின் உடலில் இருந்தமின்னணுக் கருவியைப் பார்த்து, உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த அதிகாரிகள், மக்கள் அச்சப்பட்டதைப் போல பறவையின் உடலில் கரோனா தொற்று ஏதும் இல்லை என்பதை உறுதி செய்தனர்.

Advertisement

வனத்துறை அதிகாரிகளும் விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். புறாவின் உடலில் ரேடியோ டெலிமெட்ரி டிரான்ஸ்மிட்டர் இணைக்கப்பட்டிருந்தது. புறாவின் காலில் கட்டப்பட்டிருந்த அந்த டிரான்ஸ்மிட்டரில் ஒரு ஆன்டெனாவும் இருந்தது.

ஆய்வு நடத்திய வனத்துறை அதிகாரி அஷோக் பட்டீல் கூறுகையில், புறா இயற்கையான முறையில்தான் இறந்துள்ளது. அந்த புறாவின் உடலிவ்ல கட்டப்பட்டிருந்த மின்னணுக் கருவி சேதமடைந்துள்ளது. ஆய்வு செய்ததில், அந்த டிரான்ஸ்மிட்டர் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது, அதில் இருந்த பேட்டரி ஜப்பானில் தயாரிக்கப்பட்டது. அதில் எந்த கேமராவும் இல்லை. டிரான்ஸ்மிட்டரில் ஒரு மெட்டாலிக் டேக் இணைக்கப்பட்டிருந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

பொதுவாக இந்த டிரான்மிட்டர்கள் அமெரிக்காவில் படிப்புக்காகவும், அரவு நாடுகளில் விளையாட்டுக்காகவும் பயன்படுத்துவார்கள். ஆனால் நமது நாட்டில் இதுபோன்ற கருவிகளை உயிரினத்தோடு இணைப்பது சட்டப்படிக் குற்றம். இதுகுறித்து தற்போது எந்த கருத்தும் கூற முடியாது. விசாரணையில்தான் உண்மை தெரிய வரும் என்றும் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.