குஜராத்தில் இன்று மட்டும் 247 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரத்தைத் தொடர்ந்து இரண்டாவது மாநிலமாக குஜராத் உள்ளது. இங்கு கடந்த 24 மணி நேரத்தில் 247 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3,548 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இதில் 394 பேர் மட்டுமே கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அதிகபட்சமாக ஆமதாபாத்தில் 1,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பாதிப்பு 29,435, உயிரிழப்பு 934 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.