கேரளத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பினராயி விஜயன் இன்று (செவ்வாய்கிழமை) தெரிவித்ததாவது:
"கேரளத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 485 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
20,255 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். 518 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.