மணிப்பூரில் 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி
கரோனா எதிரொலியாக மணிப்பூரில் அரசுப் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும்
இம்பால்: கரோனா எதிரொலியாக மணிப்பூரில் அரசுப் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று கல்வித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கல்வி ஆணையர் ரஞ்சித் சிங் கூறுகையில்,
உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவியுள்ளது. இந்நிலையில், மணிப்பூரில் 2019-20 கல்வியாண்டில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டிய தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது.
இதையடுத்து, தேர்வின்றி 11-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் மணிப்பூர் உயர்நிலை கல்வி கவுன்சில் நடத்திய 11-ஆம் வகுப்புக்கான தேர்வில், ஐந்து பாடங்களின் வினாத்தாள் கசிந்ததால், தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.