முகப்பு
இந்தியா

புது தில்லியில் அதிகாரிக்கு கரோனா பாதிப்பு; நீதி ஆயோக் கட்டடத்துக்கு சீல்

தில்லியில் உள்ள நீதி ஆயோக் அலுவலகத்தில் பணியாற்றி வந்த இயக்குநர் பதவியில் இருந்த நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த கட்டடத்துக்கு 48 மணி மணி நேரத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:33 PM
பகிர்:


புது தில்லி: தில்லியில் உள்ள நீதி ஆயோக் அலுவலகத்தில் பணியாற்றி வந்த இயக்குநர் பதவியில் இருந்த நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த கட்டடத்துக்கு 48 மணி மணி நேரத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

நீதி பவனில் பணியாற்றி வந்த இயக்குநர் பதவியில் இருந்த நபருக்கு கரோனா இருப்பது இன்று காலை 9 மணிக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக, அவர் பணியாற்றி வந்த கட்டடத்துக்கு 48 மணி நேரத்துக்கு சீல்வைக்கப்பட்டதாக நீதி அயோக் ஆலோசகர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத் துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது அளிக்கும் அறிவுறுத்தல்கள் முழுவதும் பின்பற்றப்படும். அதன்படியே, 48 மணி நேரத்துக்கு கட்டடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.