கரோனா விரைவு பரிசோதனைக் கருவிகளை இந்தியாவிலேயே தயாரிக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் இன்று தில்லி சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் காணொலி மூலமாக ஆலோசனை நடத்தினார் .
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தில்லியில் 13 துணை மருத்துவர்கள், 26 செவிலியர்கள், 24 களப்பணியாளர்கள், 33 மருத்துவர்கள் என 4.11% சுகாதாரப் பணியாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் கவலை அளிக்கிறது. தற்போது, தில்லியில் சுமார் 100 ஹாட்ஸ்பாட் பகுதிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை குறைய வேண்டும்' என்று தெரிவித்தார்.
பின்னர், 'இந்தியாவிலே ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் ஆன்டிபாடி டெஸ்ட் கிட்களை தயாரிக்க முடியும். இதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்த பின்னர் இந்தியாவிலே கரோனா பரிசோதனைக் கருவிகள் தயாரிப்புப் பணி தொடங்கும். மே 31-க்குள் ஒரு நாளைக்கு 1 லட்சம் பேருக்கு சோதனை என்ற இலக்கை அடைய முடியும்' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.