இந்தியா

நீங்கள் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவரா? கரோனா முடியும் வரை கண்ணாடிக்கு மாறுவது நல்லது!

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், கரோனா தொற்று குறித்த புதுப் புது தகவல்கள் நாள்தோறும் வந்தவண்ணம் உள்ளன.

DIN


கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், கரோனா தொற்று குறித்த புதுப் புது தகவல்கள் நாள்தோறும் வந்தவண்ணம் உள்ளன.

இதுவரை சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல்தான் கரோனாவுக்கான அறிகுறியாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது நுகர்வு மற்றும் ருசி அறியும் திறனை இழப்பது, தசை வலி உள்ளிட்ட ஆறு புதிய அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.

சமூக இடைவெளி, வீட்டுக்குள்ளேயே இருப்பது போன்றவை மட்டுமே தற்போதைக்கு நாம் கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள். அதே சமயம், கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவோர், கரோனா தொற்று அபாயம் குறையும் வரை, கண்ணாடியைப் பயன்படுத்துவது நல்லது என்று கண் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதாவது, கண்ணாடியை அணிவதன் மூலம், ஒருவர் கண் மற்றும் முகத்தை தொடுவது தவிர்க்கப்படும். அதே சமயம், கையில் கரோனா தொற்று இருந்தால், கான்டாக்ட் லென்ஸ் மூலமாகவும் அது ஒருவரது உடலுக்குள் செல்ல வழி ஏற்பட்டுவிடும். இது மட்டுமல்ல, வேறு எந்த தொற்றும் இப்படி பரவ வாய்ப்புள்ளது என்று கண் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

சிலர், கான்டாக்ட் லென்ஸ் பொருத்தும் அல்லது கழற்றும் போது கைகளைக் கழுவவும் மறந்து விடலாம். இதன் மூலம் கரோனா பரவ அதிக வாய்ப்புள்ளது. கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தும் போது ஒருவர் தன்னை அறியாமல், கைகளை வாய் மற்றும் மூக்கில் வைக்கவும் வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT