உத்தரப் பிரதேசத்தில் நான்கு காவலர்களுக்கு கரோனா உறுதி
உத்தரப் பிரதேசத்தின், ராம்கர் காவல் நிலையத்தில் மூத்த துணை ஆய்வாளர் உள்பட நான்கு காவலருக்கு
பிரோசாபாத்: உத்தரப் பிரதேசத்தின், ராம்கர் காவல் நிலையத்தில் மூத்த துணை ஆய்வாளர் உள்பட நான்கு காவலர்களுக்கு புதன்கிழமை கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 14-ம் தேதி ராம்கர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் ஊரடங்கை மீறிய குற்றத்திற்காக இளைஞர் ஒருவரைக் கைது செய்தார். பின்னர் அந்த இளைஞருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது என்று தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ்.கே. தீட்சித் தெரிவித்தார்.
இதையடுத்து, ராம்கர் காவல் நிலையத்தில் பணியாற்றும் 27 காவலர்களின் இரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில் நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இளைஞருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவுடன், ராம்கர் காவல் நிலையத்தில் உள்ள காவல்துறை ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டதாகத் துணை ஆய்வாளர் பிரபால் பிரதாப் சிங் தெரிவித்தார்.