இந்தியா

ராஜஸ்தானில் கரோனா பாதிப்பு 2,383 ஆக அதிகரித்தது!

ராஜஸ்தான் இன்று மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு 2,383 ஆக உயர்ந்துள்ளது. 

DIN

ராஜஸ்தான் இன்று மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு 2,383 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் கரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக ராஜஸ்தானும் உள்ளது. 

இந்நிலையில், ராஜஸ்தானில் இன்று மேலும் 19 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,383 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 51 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 

இன்று பாதிக்கப்பட்ட 19 பேரில், ஜெய்ப்பூரிலிருந்து 5 பேர், அஜ்மீரில் 11, உதய்பூர், பன்ஸ்வாரா, ஜோத்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து தலா ஒருவரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா பாதிப்பு 31,332 ஆகவும் உயிரிழப்பு 1,007 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT