முகப்பு
இந்தியா

ஒடிசாவில் புதிதாக மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று

ஒடிசாவில் புதிதாக மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 30 ஏப்ரல், 2020 at 7:30 PM
பகிர்:

ஒடிசாவில் புதிதாக மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை  33,050-ல் இருந்து 33,610 ஆக அதிகரித்துள்ளது.  உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,074-ல் இருந்து 1,075 ஆக அதிகரித்துள்ளது. 

இதுவரை 8,373 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் கடும் பாதிப்பை சந்தித்துள்ள மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. இந்த நிலையில் ஒடிசாவில் புதிதாக மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Advertisement

இத்துடன் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 142ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 102 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் அதேசமயம் 39 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.