முகப்பு
இந்தியா

கைச்சுத்த திரவத்தைக் குடித்து கரோனா நோயாளி தற்கொலை முயற்சி

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கைச்சுத்த திரவத்தைக் குடித்து கரோனா நோயாளி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 30 ஏப்ரல், 2020 at 7:53 PM
பகிர்:

கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கைச்சுத்த திரவத்தைக் குடித்து கரோனா நோயாளி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்ட்ராவில் பணியாற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது சொந்த ஊருக்கு நடந்து செல்லும்  வழியில், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த இருநாட்களுக்கு முன் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அவர் ஏன் இந்த வழியில் வந்தார் என்பது குறித்து விசாரித்த காவல்துறையினர், அவருக்கு கரோனா தொற்று உள்ளதா என்பது குறித்து சோதிப்பதற்காக ஏற்பாடு செய்தனர். சோதனை முடிவில் அவருக்குத் தொற்று உறுதியானதால், வியாழனன்று காலை அவர் கான்பூர் தேஹட் பகுதியில் உள்ள சர்சால் தனிமைப்படுத்துதல் மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

ஆனால் அங்கு சேர்ந்த சிறிது நேரத்திலேயே அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த கைச்சுத்த திரவத்தைக் எடுத்துக் குடித்து விட்டார். இதன்காரணமாக அவர் உடனடியாக அருகில் உள்ள ஹெல்லேட் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் அபாய கட்டத்தில் இருப்பதாக மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் மவுரியா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.