முகப்பு
இந்தியா

மேற்கு வங்க அரசை ஆவிகளா நடத்துகிறது? மாநில பாஜக தலைவர் காட்டம்

மேற்கு வங்க அரசை ஆவிகளா நடத்துகிறது? என்று மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 30 ஏப்ரல், 2020 at 4:29 PM
திலிப் கோஷ்
பகிர்:

கொல்கத்தா:   மேற்கு வங்க அரசை ஆவிகளா நடத்துகிறது? என்று மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றால் மரணமடைபவர்கள் குறித்த விபரங்களை பரிசோதித்து உறுதி செய்ய குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தக்குழுவின் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்கள் சிலர் புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே அதுதொடர்பாக புதனன்று செய்தியாளர்கள் மாநில முதல்வர் மம்தா பானர்ஜியிடம் கேள்வி எழுப்பினர்.

அப்போது மம்தா, அந்தக் குழுவைத் தான் உருவாக்கவில்லை என்றும்   அந்தக் குழுவில் உறுப்பினர்கள் யார் என்பது பற்றித் தனக்குத் தெரியாது என்றும் பதிலளித்தார். இதுகுறித்து தகவல் தெரிவிக்க தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதரத்துறைச் செயலாளர் ஆகிய இருவரும்தான் சரியானவர்கள்’ என்றும் பதிலளித்தார்.  

Advertisement

இந்நிலையில் மேற்கு வங்க அரசை ஆவிகளா நடத்துகிறது? என்று மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

 இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது  

மருத்துவக்குழு தொடர்பாக முதல்வர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். யார் யாரெல்லாம் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளர்கள் என்பது கூட தனக்குத் தெரியாது என்று முதல்வர் கூறுகிறார். அப்படியென்றால் மேற்கு வங்க அரசை நடத்துவது யார்? ஒருவேளை ஆவிகள்தான் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் முதல்வர் இப்படி பதில் கூறியிருக்க மாட்டார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.