கோவாவிலிருந்து கடத்தப்பட்ட 5,000 லிட்டர் எரிசாராயம் கேரளாவில் பறிமுதல்
கோவாவிலிருந்து கடத்தப்பட்ட 5,000 லிட்டர் எரிசாராயம் கேரளாவில் வியாழனன்று பறிமுதல் செய்யப்பட்டது.
கொச்சி: கோவாவிலிருந்து கடத்தப்பட்ட 5,000 லிட்டர் எரிசாராயம் கேரளாவில் வியாழனன்று பறிமுதல் செய்யப்பட்டது.
கோவாவிலிருந்து கடத்தப்பட்ட 5,000 லிட்டர் எரிசாராயம் கேரளாவில் கொச்சிக்கு அருகேயுள்ள அலுவா என்னும் இடத்தில் கேரள காவல்துறையினரால் வியாழனன்று பறிமுதல் செய்யப்பட்டது.
சிலநாட்களுக்கு முன்னதாக கொச்சி அருகேயுள்ள காலடி என்னும் இடத்தில் கள்ளச்சாரயத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அதுதொடர்பாக நடத்திய விசாரணையின் முடிவில் அலுவாவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிசாராயத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர், இங்கிருந்த எரிசாரயமே அவர்கள் கள்ளச்சாராயம் தயாரிக்க மூலப்பொருளாக பயன்பட்டதும் தெரியவந்தது.
Advertisement
கோவாவில் இருந்து சானிட்டைசர் தயாரிப்பதற்குத் தேவையென்று மருத்துவ நிறுவனம் ஒன்றின் பெயரில் இரண்டு லாரி லோடுகளில் எரிசாராயம் கொண்டு வரப்பட்டுள்ளது. மீதமுள்ள மற்றொரு லோடு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரனை நடத்தி வருகிறது.
கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு கேரளாவில் காவல்துறையினர் மற்றும் கலால் துறையினர் இணைந்து இத்தகைய சோதனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு சாராயம் பறிமுதல் செய்வது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.