புது தில்லி: இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் இதுவரை பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
வடகிழக்கு மாநிலங்களில் இதுவரை 60 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில்,
அஸ்ஸாம் - 41
மணிப்பூர் - 2
திரிபுரா - 2
அருணாசலம் - 1
மிசோரம் - 1
நாகாலாந்து - 1
மேகாலயம் - 12
அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று புதிதாக மேலும் நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வடகிழக்கு மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 24 நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அஸ்ஸாம் மற்றும் மேகாலயத்தில் தலா ஒருவர் மரணம் அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.