ராஜஸ்தானில் மேலும் 86 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு 2,524 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக ராஜஸ்தானும் உள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தானில் மேலும் 86 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,524 ஆகவும் உயிரிழப்பு 57 ஆகவும் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 827 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 33,050 ஆகவும் உயிரிழப்பு 1,074 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.