முகப்பு
இந்தியா

ஊதியக் குறைப்பில் இறங்கியிருக்கும் ரிலையன்ஸ் 

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் பெரும்பாலான ஊழியர்களுக்கு 10 முதல் 50% ஊதியக் குறைப்பை மேற்கொள்ள ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:34 PM
பகிர்:


புது தில்லி: கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் பெரும்பாலான ஊழியர்களுக்கு 10 முதல் 50% ஊதியக் குறைப்பை மேற்கொள்ள ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன் நிர்வாகியும், இந்தியாவின் பணக்காரர்களில் முதலிடத்தை வகிப்பவருமான முகேஷ் அம்பானி தனது முழு ஊதியத்தையும் பிடித்தம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள், செயல் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மூத்தத்தலைவர்கள் அனைவருக்கும் 30 - 50 சதவீத ஊதியக் குறைப்பு செய்யப்பட உள்ளது.

ரிலையன்ஸ் குழுமத்தின் ஹைட்ரோகார்பன் வணிகம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது, குறைவான தேவை காரணமாக எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் வணிகம் பொருளாதார சிக்கலை சந்தித்திருப்பதே இந்த ஊதியக் குறைப்புக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

இது குறித்து நிறுவனத்தின் பல துறைத் தலைவர்களும் தங்களது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.