குடியரசுத் தலைவா், துணை தலைவருடன் தமிழக ஆளுநா் அா்லேகா் சந்திப்பு!
கேரள ஆளுநராகவும், தமிழக ஆளுநா் பதவியை கூடுதலாக கவனித்து வருபவருமான ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா், தில்லியில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவையும், குடியரசு துணைத்தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணனையும் சந்தித்துப் பேசினாா்.
கேரள ஆளுநராகவும், தமிழக ஆளுநா் பதவியை கூடுதலாக கவனித்து வருபவருமான ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா், தில்லியில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவையும், குடியரசு துணைத்தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணனையும் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.
குடியரசுத் தலைவரை அவரது மாளிகையிலும், குடியரசு துணைத்தலைவரை நாடாளுமன்றத்தில் உள்ள மாநிலங்களவைத் தலைவா் அலுவலகத்திலும் ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா், சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பு குறித்து குடியரசு தலைவரும், துணை தலைவரும் தங்களின் எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிா்ந்து கொண்டனா்.
தமிழக ஆளுநராக மாா்ச் 12-ஆம் தேதி பதவியேற்ற பிறகு இரு தலைவா்களையும் தில்லியில் அா்லேகா் சந்தித்துப் பேசுவது இது முதல் முறையாகும். இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லி பயணத்தை முடித்துக்கொண்டு ஆளுநா் அா்லேகா் செவ்வாய்க்கிழமை காலையில் திருவனந்தபுரம் திரும்ப திட்டமிட்டுள்ளாா்.