இந்தியா

28 காவலர்களுக்கு கரோனா: 10,000 தற்காப்பு கவசங்கள் வாங்குகிறது உத்தரப்பிரதேச காவல்துறை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 28 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சுமார் 10 ஆயிரம் தற்காப்பு கவசங்கள் வாங்குகிறது அந்த மாநில காவல்துறை.

PTI


லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 28 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சுமார் 10 ஆயிரம் தற்காப்பு கவசங்கள் வாங்குகிறது அந்த மாநில காவல்துறை.

முன்னதாக, 55 வயதுக்கு மேற்பட்ட மற்றும் உடல் நலக் குறைபாடு உள்ள காவலர்கள் பணிக்கு வர வேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பணியில் இருக்கும் காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு கவசங்களை வாங்க உத்தரப்பிரதேச காவல்துறை முடிவு செய்துள்ளது.

மேலும், பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் காவலர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வாங்கிக் கொள்ளுமாறு காவல்துறை இயக்குநர் ஹிதேஷ் சந்திரா அவாஸ்தி, மாவட்ட காவல்துறை ஆணையர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

வியாழக்கிழமை வரை உத்தரப்பிரதேச மாநிலத்தில் 28 காவலர்களுக்கு  கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, 10 ஆயிரம் தற்காப்பு கவசங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவை அதிகமாக இருப்பதால் தற்போது வரை 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை மட்டுமே கிடைத்துள்ளது. மாவட்ட அளவில் மீதமுள்ள 6 ஆயிரம் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் காவல்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT