இந்தியா

போபாலில் 10 நாள்கள் பொதுமுடக்கம்: பக்ரீத் நாளிலும் வெறிச்சோடிய கடைவீதிகள்

ANI


போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அங்கு 10 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பத்து நாள்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால், பக்ரீத் பண்டிகையாக இருந்த போதும் இன்று மசூதிகளும், முக்கிய கடை வீதிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பரவலாக மசூதிகளில் தொழுகை நடத்த அனுமதி மறுப்பட்டதால், முஸ்லிம் மக்கள் வீடுகளிலேயே தொழுகையை மேற்கொண்டனர்.

வழக்கமாக பக்ரீத் நாளில் ஏராளமான முஸ்லிம் மக்கள் துணிமணிகள் வாங்கவும், இனிப்புகள் வாங்கவும் கடை வீதிகளில் குவிந்திருப்பார்கள். ஆனால், பொது முடக்கம் காரணமாக கடைகள் மூடப்பட்டிருப்பதால், வழக்கமான பக்ரீத் கொண்டாட்டம் இந்த ஆண்டு களைகட்டவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

SCROLL FOR NEXT