இந்தியா

நாக்பூரில் சர்க்கரை ஆலை பாய்லர் வெடித்து 5 பேர் பலி

DIN

நாக்பூரில் சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்ததில் 5 பேர் பலியானார்கள். 

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் மானாஸ் அக்ரோ என்ற சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், இன்று பிற்பகல் 2.14 மணியளவில் திடீரென கொதிகலன் வெடித்து விபத்திற்குள்ளானது. தொடர்ந்து தீபற்றி எரிந்தது. இதில் ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்த 5 பேர் பலியானார்கள். 

மேலும் இருசக்கர வாகனம் ஒன்றும் சேதமடைந்தது. சம்பவத்தை தொடர்ந்து பலர் ஆலையின் முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனிடையே மானாஸ் அக்ரோ ஆலையை மத்திய அமைச்சர் நிதிக் கட்கரியின் குடும்பத்தினர் நிர்வகித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என சிவசேனை தலைவர் கிஷோர் திவாரி வலியுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT