இந்தியா

கர்நாடகத்தில் 4,752, ஆந்திரத்தில் 7,822 பேருக்கு கரோனா

DIN


கர்நாடகத்தில் புதிதாக 4,752 பேருக்கும், ஆந்திரத்தில் புதிதாக 7,822 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகம்:

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,752 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 98 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,39,571 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 62,500 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 2,594 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய தேதியில் அங்கு 74,469 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருவோரில் 629 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

ஆந்திரப் பிரதேசம்:

ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,822 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 63 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,66,586 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 88672 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 1,537 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய தேதியில் அங்கு 76,377 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT