இந்தியா

கேரளத்தில் போராட்டம் நடத்த ஆகஸ்ட் 31 வரை தடை நீட்டிப்பு

DIN


கரோனா வைரஸ் நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கேரளத்தில் பொது இடங்களில் போராட்டம் நடத்த ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தடை நீட்டித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறும் வகையில் போராட்டங்கள் நடைபெற்று வருவதாக கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். மணிகுமார்  மற்றும் நீதிபதி ஷாஜி பி சாலி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஜூலை 15-ம் தேதி, கேரளத்தில் ஜூலை 31-ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், கேரள உயர் நீதிமன்றம் இந்தத் தடையை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT