ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் 
இந்தியா

ஆந்திரத்தில் இ-ரக்ஷாபந்தன் திட்டம் அறிமுகம்: மாநில முதல்வர் ஜெகன்மோகன் தொடங்கி வைத்தார்

ஆந்திரத்தில் இணையக் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக   இ-ரக்ஷாபந்தன் திட்டத்தை மாநில முதல்வர் ஜெகன்மோகன் திங்கள்கிழமை துவக்கி வைத்தார்.

DIN

ஆந்திரத்தில் இணையக் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக   இ-ரக்ஷாபந்தன் திட்டத்தை மாநில முதல்வர் ஜெகன்மோகன் திங்கள்கிழமை துவக்கி வைத்தார்.

ஆந்திர மாநில சிஐடி மற்றும் காவல்துறையின் சார்பில் சைபர் இணையக் குற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணையவெளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரத்யேகமாக செயல்படுத்தப்படும் ஒரு மாத கால திட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இ-ரக்ஷாபந்தனின் ஒரு பகுதியாக இணையவழி கருத்தரங்குகள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்தரங்கில் இணைய வல்லுநர்கள் பல்வேறு வகையான இணைய குற்றங்கள் குறித்து பேசுவதோடு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.

இ-ரக்ஷாபந்தன் திட்டத்தையொட்டி வானொலி நிகழ்ச்சி மற்றும் மாணவர்களுக்கான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆந்திரக் காவல்துறை மற்றும் மாநில சிஐடி பிரிவு ஆகஸ்ட் மாதத்தை சுதந்திரம் மற்றும் மின் பாதுகாப்பு மாதமாக மாற்றுவோம் எனத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT