நேபாளத்தில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை எட்டியது
நேபாளத்தில் புதிதாக 418 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கு தொற்று பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 20,750 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 57 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
காத்மாண்டு: நேபாளத்தில் புதிதாக 418 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கு தொற்று பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 20,750 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 57 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேபாள சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில், கரோனா பாதித்தவர்களில் இதுவரை 14,961 பேர் குணமடைந்துள்ளனர். இதன் அடிப்படையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 72.1% பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
புதிதாக கரோனா தொற்றுக்கு உள்ளான 418 பேர் உள்பட திங்கள்கிழமை நிலவரப்படி நேபாளத்தில் 5,732 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
நேபாளத்தில் காத்மாண்டு, பிரத்நகர், பொக்காரா உள்ளிட்ட ஊரகப் பகுதிகளில் அதிகமான கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு வருகிறார்கள்.