இந்தியா

'கஃபீல் கான் மீது மட்டும் எதற்கு தேசியப் பாதுகாப்புச் சட்டம்?'

DIN


குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக போராட்டம் நடத்தியதற்காக மருத்துவர் கஃபீல் கான் மீது மட்டும் எதற்கு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் மக்களவைத் தலைவர் அதிர் ரஞ்சன் சௌதரி கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுபற்றி பிரதமர் மோடிக்கு அதிர் ரஞ்சன் சௌதரி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"சிறந்த மருத்துவரும், நன்கு உதவக்கூடிய மனிதருமான கஃபீல் கானுக்கு இழைக்கப்பட்டுள்ள கடுமையான அநீதி குறித்து உங்களது கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சிஏஏ-வுக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக என்எஸ்ஏ கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் தவித்து வருகிறார்.

எனது கட்சி சார்பில் இந்த சட்டத்தை நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றம் வெளியேவும் நான் கடுமையாக எதிர்த்திருக்கிறேன். எனினும், என் மீதோ, நாடு முழுவதும் போராட்டம் நடத்திய லட்சக்கணக்கானோர் மீதோ என்எஸ்ஏ சட்டம் பாயவில்லை. இந்திய அரசியலமைப்பில் கருத்து சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள போதிலும் இளம் மருத்துவர் இவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பது வியப்பாக உள்ளது."

டிசம்பர் 12, 2019-இல் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் கஃபீல் கான் கோபமூட்டும் வகையில் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதன் காரணமாக உத்தரப் பிரதேச சிறப்புப் படையால் அவர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 14, 2020-இல் அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT