கோப்புப்படம் 
இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,050 பேருக்கு கரோனா; 803 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,050 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,050 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பாதிப்பு மற்றும் உயிர்பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனினும, இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் 52,050 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறப்பட்டுள்ளதாவது, நாட்டில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 52,050 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனால் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 18,55,745-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 12,30,510 போ் கரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனா். 38,938 போ் உயிரிழந்துள்ளனா். 5,86,298 போ் தொடா்ந்து சிகிச்சையில் உள்ளனா். திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 803 போ் கரோனாவால் உயிரிழந்தனா்.

நாட்டில் தொடா்ந்து 6-ஆவது நாளாக 50,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் நிராகரிப்பு: மக்களவைத் தலைவருக்கு ராகுல் கடிதம்!

2-ஆவது சிம்பொனியை எழுதி முடித்த இளையராஜா!

இந்தியா - அமெரிக்கா வணிக ஒப்பந்த கூட்டறிக்கை: இந்த வாரம் வெளியாகும் எனத் தகவல்!

எலிமினேட்டர்: குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

சாரேகாமா இந்தியா லாபம் 17.8% சரிவு!

SCROLL FOR NEXT